உங்களுக்கு உங்கள் கடவுச்சொல் மறந்திருந்தால், உள்நுழைவுப் பக்கத்தில் கடவுச்சொல் புலத்தை அடுத்துள்ள ‘கடவுச்சொல் மறந்துவிட்டது’ என்பதைக் கிளிக்செய்யுங்கள். பின்னர் நீங்கள் LifeWorks இல் பதிவுசெய்த ஈமெயிலை உள்ளிடுமாறு உங்களிடம் கோரப்படும். அப்போது உங்கள் கடவுச்சொல்லை மீளமைப்பதற்கான ஒரு இணைப்பைக் கொண்ட ஒரு ஈமெயிலை உங்களுக்கு நாங்கள் அனுப்புவோம். நீங்கள் இதில் கிளிக்செய்யும் போது, ஒரு புதிய ஒரு சாளரம் திறக்கும், அதில் நீங்கள் ஒரு புதிய கடவுச்சொல்லை உள்ளிடலாம்.
நீங்கள் ஏற்கனவே LifeWorks இல் உள் நுழைந்துள்ள நிலையில், நீங்கள் ஒரு புதிய கடவுச்சொல்லை விரும்பினால், அதனை நீங்கள் அமைவுகள் > கணக்கு அமைவுகள் > கடவுச்சொல்லை மாற்றவும் என்பதன் ஊடாகப் புதுப்பிக்க முடியும், அல்லது இந்த இந்த இணைப்பை பின்தொடருங்கள். ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்குவதற்கு, ஏற்கனவே உள்ள உங்கள் கடவுச்சொல் உறுதிப்படுத்த வேண்டும்.
ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்கினாலும், இணைய உலாவி பழை கடவுச்சொல்லை தொடர்ந்து சேமித்து வைத்திருக்கக்கூடும் என்பதை தயவுசெய்து அறிந்துகொள்ளுங்க்ள. மீண்டும் உள் நுழையும் போது ஏதேனும் முன்னைய கடவுச்சொற்கள் இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு புதிய கடவுச்சொலை கையினால் டைப் செய்யுங்கள்.
நீங்கள் எமக்கு ஆதரவளிக்கும் உலாவிகளைப் (Chrome, Firefox, Safari and Internet Explorer 11) பயன்படுத்துவதையும் எந்தவொரு வடிவத்திலுமான தனிப்பட்ட உலாவலும் முடக்கப்பட்டிருப்பதையும் தயவுசெய்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் பயனர்பெயர் மறந்திருந்தால், தயவுசெய்து எமது ஆதரவுக் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள்.